siragadikka aasai today episode – 23-06-2025 – Full review

இன்னைக்கு எபிசோடு: எப்ப சார் கல்யாணத்த முடிப்பீங்க!

இன்னைக்கு எபிசோடுல மனோஜ், நம்ம ரோஹினியப் பாத்து **”எப்படி அம்மா போட்ட ஒரு லட்சம் fine-கு காசு கொடுக்கப்போற? அப்றம் யார்கிட்ட அந்த திருட்டு நகைய ஏமாந்தியோ, அங்கேயே போயி வாங்கிட்டு வானு சொல்லுறாப்ல அது சிட்டிகிட்ட தான் ஏமாந்துருக்கானு தெரியாது வேற, நம்ம ரோஹினிக்கு கடுப்பாகாத பின்னே? இதுல இன்னொரு “comedy” என்னன்னா, **”அத வாங்க, முத்துவையும் கூட்டிட்டு போய் வாங்கிட்டு வானு மனோஜ் சொல்றாரு. அய்யய்யோ! அப்போ நீ எதுக்கு புருஷனா இருக்க? நம்ம மைண்ட் வாய்ஸ் கேட்காதா உங்களுக்கும் கேட்டுச்சா? எனக்கு அந்த சீனைப் பாத்தவுடனே, “டேய் மனோஜ், நல்லவேளை உன் பேரு ‘மனோஜ்’, ‘Man-less’ இல்லனு” தோணுச்சு.

மக்கள் mind voice மனோஜ் வீரத்துக்கு


மீனா, சீதா – கல்யாணம் மந்தாகினியா போச்சி!

இதே சமயம், நம்ம மீனாவும் சீதாவும் சீதாவுடைய “திருட்டு கல்யாணம்” பத்தி நெனச்சு feel பண்ணிட்டு இருக்காங்க. “அம்மாவுக்குத் தெரியாம பண்ண போறேன்னு சீதாவும்” **”முத்துவுக்குப் பிடிக்காத ஆள் கூட தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணப்போறோம்னு மீனாவும் feel பண்ணிட்டு இருந்தாங்க. இவங்க feel பண்ணிட்டே எபிசொட் இழுவையா இழுத்து, ரிஜிஸ்டர் ஆபிஸ் வரைக்கும் கூட்டிட்டு போய், அப்படியே எபிசோட முடிச்சிட்டாங்க.

எப்ப சார் கல்யாணத்த முடிப்பீங்க?


உங்க கருத்துக்களைச் சொல்லுங்க!

நீங்க என்ன நெனைக்குறீங்க?

  • இந்த மனோஜ் ரோகினிகிட்ட ஏமாந்தத்துக்கு முத்துவை குடித்து போய் நகைக்கு பணத்தை வாங்கிட்டு வானு சொன்னது பத்தி உங்க கருத்து என்ன?
  • சீதாவுடைய திருட்டு கல்யாணம் முடிஞ்சா வீட்ல அப்புறம் என்ன ஆகும்னு நெனைக்குறீங்க?
  • இந்த எபிசோடு பத்தி உங்க funniest comment என்ன?

கீழே கமெண்ட் பண்ணுங்க, பேசுவோம்!

About the author: Nanban Saguni Admin
Tell us something about yourself.

Comments

No comments yet