சிறகடிக்க ஆசைகள்: ஒரு செயின் சண்டையும், ஒரு லட்சம் ஃபைனும்!
என்னங்க நடக்குது இன்னைக்கு எபிசோட்ல?! “சிறகடிக்க ஆசைகள்”ன்னு பேரு வச்சுட்டு, “சங்கிலி ஆசைகள்”னு பேர் வச்சிருக்கலாமோனு தோணிச்சி! வாங்க, என்னாச்சுன்னு டீட்டெய்லா பார்ப்போம்!
நம்ம பூக்கார அம்மணி வீட்டுல பிறந்தநாள் பார்ட்டி. அங்க நம்ம விஜயா மா, ரோகிணி கொடுத்த செயின ஜாலியா போட்டு வந்து மத்த ஆண்டிஸ் எல்லாரும் கூட சேர்ந்து ஒரே குத்து ஆட்டம், கொண்டாட்டம்னு கலக்கிகிட்டு இருந்தாங்க.
ஆண்டிஸ் கெட்டப்லம் பார்க்க
அதிலும் நம்ம விஜயா அம்மா, அந்த செயினை காட்டி காட்டி கெத்தா ஆடிட்டு இருந்தாங்க… “அப்போவே தெரியும்ல, கண்டிப்பா ஏதோ ஒரு பெரிய சம்பவத்தை டைரக்டர் பிளான் பண்ணியிருக்காரு”ன்னு மனசுக்குள்ள ஒரு அலர்ட் மணி அடிச்சதுங்க!
அவங்க ஒருபக்கம் செயினை காட்டி காட்டி ஆட, இன்னொரு பக்கம் ஒரு சேட்டு ஃபேமிலி ஆன்ட்டி என்ட்ரி கொடுத்தாங்க. கடைசியில தெரிஞ்சது என்னன்னா, அந்த செயினோட ஒரிஜினல் ஓனர் அந்த ரெண்டாவதா வந்த சேட்டு வீட்டு ஆன்ட்டிதான்னு! அவங்ககிட்ட திருடுன செயினைதான் நம்ம ரோகிணி ஒரு லட்சத்துக்கு வாங்கி ஏமாந்திருக்காங்க!
அந்த ஆன்ட்டி நம்ம விஜயா கழுத்துல அந்த செயினை பார்த்ததும் எப்படி ஒரு முடிச்சி பாருங்க அவங்க காட்டி காட்டி ஆட அத சேட்டு ஆண்ட்டி பார்க்க “இங்கதான் இருக்கா என் தங்க சங்கிலுனு கண்டுபிடிச்சுட்டாங்க. அப்புறம் என்ன? “போலீஸை கூப்பிடட்டுமா?”ன்னு மிரட்டி, விஜயாவை அசிங்கப்படுத்தி, செயினை புடுங்கி அனுப்பிட்டாங்க.
விஜயா Mind Voice
சும்மாவே ரோகிணி மேல காண்டுல இருக்கிற நம்ம விஜயா, வீட்டுக்குப் போனதும் சும்மா இருப்பாங்களா? வெளு வெளுன்னு வெளுத்துட்டாங்க ரோகிணியை!
அங்க இருக்க நம்ம ஆளு முத்து மட்டும் சும்மா இருப்பாரா? அவரு இன்னும் கொஞ்சம் எரியுற எண்ணைல ஏத்திவிட, விஜயாவுக்கு கோவம் கொதிச்சிருச்சு. உடனே “இவளுக்கு ஃபைன் போடணும்!”ன்னு ஒரு லட்ச ரூபாய் ஃபைன் போட்டுட்டாங்க! இங்கதான் எனக்கு ஒரு டவுட்டுங்க… ஏமாந்தது ரோகிணி. ஆனா எதுக்கு திரும்ப விஜயாவுக்கு ஃபைன் கொடுக்கணும்னு மனசுக்குள்ள கேட்டுக்கிட்டேன் சீரியல் தான லாஜிக்கே இல்லனாலும் accept பண்ண வேண்டியது தான்! ஆனாலும் நம்ம விஜயா ஃபைன் போட்டுட்டாங்க. (லாஜிக்கெல்லாம் நமக்கு எதுக்கு, சீரியல்னாவே இப்படித்தானே?!).
இருந்தாலும் இன்னைக்கு எபிசொட்ல கடைசியா ரோஹிணி நல்ல சம்பவம் பண்ணி விட்டுட்டா விஜயாக்கு
விஜயா: உன்னால என்ன பண்ண முடியுமே அத பண்ணிட்ட
இந்த எபிசோடு கண்டிப்பா பாருங்க. நல்லா fun இருக்கு. பார்த்துட்டு உங்க கருத்து என்னன்னு சொல்லுங்க!






Comments