சிறகடிக்க ஆசைகள்: சீதா கல்யாணம்… திருட்டு கல்யாணமா? இல்ல, ‘திருப்புமுனை’ கல்யாணமா?!
அப்பாடா! ஒருவழியா சீதா கல்யாணம் ரெஜிஸ்டர் ஆபிஸ்ல, யாருக்கும் தெரியாம நடந்து முடிஞ்சிருச்சுங்க! அடடா, நம்ம ஊர்ல ஒரு பொண்ணு தனக்குப் பிடிச்சவனை கல்யாணம் பண்ண எவ்வளவு கஷ்டப்படணும்?! ‘அக்கறை’ன்ற பேர்ல சில சொந்தக்காரங்க, “இவளுக்கு ஒன்னும் தெரியாது, நாங்க பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம்”னு சொல்லி, அவ இஷ்டப்பட்ட வாழ்க்கைய வாழவிடாம பண்ணிடுவாங்க. அப்புறம், பிடிக்காத வாழ்க்கையில எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிச்சு வாழணும்… நினைச்சாலே கஷ்டமா இருக்குங்க!
எவ்ளோ தாங்க புண்படுத்துவீங்க 😭😭😭
ஆனா, இப்போல்லாம் நாம நியூஸ்ல பார்க்கிறோமே… கல்யாணம் ஆகி பத்தே நாள்ல புருஷனை போட்டுத் தள்ளுறது, இல்ல தாலி கட்டுற கடைசி நேரத்துல ‘வேண்டாம்!’னு அழுதுட்டுக் ஓடிப் போறதுன்னு… அதெல்லாம் பார்க்கும்போது, சீதா பண்ண இந்த ‘திருட்டு கல்யாணம்’ எவ்வளவோ பரவாயில்லைனு தோணுது. ஏன்னா, எங்கேயோ நல்ல வாழ்க்கையை தேடிப் போற இன்னொருத்தருக்கும் இதனால தர்மசங்கடமும் வேதனையும்தான் மிச்சம்! அதனால, இந்த ரூட் பெட்டர்!
சீரியல் ஸ்பெஷல்: கல்யாணமும், கடுப்பேத்தும் ட்விஸ்டுகளும்!
சரி, சீரியல் கதைக்கு வருவோம். வெறும் கல்யாணத்தை மட்டும் காட்னா போதுமா? நம்ம மக்களை டென்ஷன் ஆக்க வேணாமா? அதனால, இவங்க கல்யாணம் நடக்கும்போது, நம்ம முத்துவும் அங்க வந்துடுறாரு! மீனாவை பார்க்கிறார். அவ எப்படியோ சமாளிக்கிறா. அடுத்து, சீதாவோட புருஷனைப் பார்க்குறாரு முத்து! அவரும் இவரும் முறைச்சுக்கிற மாதிரி சீன் வந்துட்டே இருந்துச்சு.
முத்து போலீஸ் மாப்பிள்ளை மொறச்சிக்குற moment 😂😂😂
இப்ப சீதா வீட்டுல, சீதா அம்மா கிட்டயும் முத்து கிட்டயும் கல்யாணத்தை ஏன் இன்னும் சீதாவும் மீனாவும் மறைக்கிறாங்கன்னே தெரியல! சீரியல்ல விறுவிறுப்பு வரணும்னு கடைசி வரைக்கும் இதை இழுத்துக்கிட்டுப் போய், முத்துவை அசிங்கப்படுத்துற வரைக்கும் கொண்டு போவாங்கனு நினைக்கிறேன். அப்புறம், அந்த போலீஸ் மாப்பிள்ளைக்கும் முத்துவுக்கும் சண்டை முத்தி, ஒரு பெரிய கலவரமே நடக்கும்னு தோணுது! இந்த ட்ராக் எப்படி போகப்போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்!





Comments